பிட் இந்தியா இயக்கத்தில் இணைவோம்: சைக்கிள் பேரணியில் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
பிட் இந்தியா இயக்கத்தில் இணைவோம்: சைக்கிள் பேரணியில் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
ADDED : செப் 07, 2025 10:35 AM

புதுடில்லி: பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றி,பிட் இந்தியா இயக்கத்தில் இணைவோம் என்று மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடியின் பிட் இந்தியா மற்றும் சுதேசி மந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, இன்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசியதாவது:
பிரதமர் மோடியின் பிட் இந்தியா மற்றும் சுதேசி மந்திரங்கள், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,8,000க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக,18 சதவீதமாக இருந்த சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி, 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றி, பிட் இந்தியா இயக்கத்தில் இணைவோம்.
இவ்வாறு மன்சுக் மாண்டவியா பேசினார்.