சந்திரசேகர ராவின் நற்பெயருக்கு களங்கம்: பிஆர்எஸ் சகாக்கள் மீது கவிதா குற்றச்சாட்டு
சந்திரசேகர ராவின் நற்பெயருக்கு களங்கம்: பிஆர்எஸ் சகாக்கள் மீது கவிதா குற்றச்சாட்டு
ADDED : செப் 01, 2025 09:56 PM

ஐதராபாத்: முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சொந்த கட்சியின் சகாக்கள் மீது கவிதா எம்எல்சி குற்றம்சாட்டியது பிஆர் எஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிஆர்எஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் தொண்டர்கள் மத்தியில் கவிதா பேசுகையில்,
பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும் தெலுங்கானா முன்னாள் முதல்வருமான சந்திர சேகர ராவ் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்சிக்குள் சதித்திட்டங்கள் தீட்டி, ஊழலுக்கு ஆளான சகாக்கள் மீது, சந்திரசேகர ராவ் மகளும், கட்சியின் எம்எல்சியுமான கவிதா குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக கவிதா மேலும் கூறியதாவது:
மூத்த பிஆர்எஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி. ஹரிஷ் ராவ் மற்றும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. 'மேகா' கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் எனது தந்தைக்கு, 'ஊழல் முத்திரை' சுமத்துவதில் பங்கு வகித்தனர்.
மேலும், கட்சிக்குள் சதிகளைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது என ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோரை குறிப்பிட்டார்.
தொண்டர்கள் சிந்திக்க வேண்டும், கே.சி.ஆரில் ஊழல் கறை எப்படிப் படிந்தது? அதற்கு அவரைச் சுற்றியுள்ளவர்கள்தான் காரணம். ஹரிஷ் ராவ் மற்றும் கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் ஒரு பங்கைக் கொண்டிருந்தனர். ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமாரின் அனைத்து சதிகளையும் நான் பொறுத்து கொண்டேன்.
எனது தந்தை முத்து போல தூய்மையானவர், அவர் மீது நடந்து வரும் சிபிஐ விசாரணையிலிருந்து மீண்டு வருவார். சுத்தமானவர் என்பது வெளிப்படும்.
இவ்வாறு கவிதா கூறினார்.