கன்னடர் -- தமிழர் ஒற்றுமை மாநாடு: தாய்மொழி கூட்டமைப்பு நன்றி
கன்னடர் -- தமிழர் ஒற்றுமை மாநாடு: தாய்மொழி கூட்டமைப்பு நன்றி
ADDED : நவ 01, 2024 07:01 AM
பெங்களூரு: கன்னடர் -- தமிழர் ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு, தாய்மொழி கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
தாய்மொழி கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை:
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கடந்த 20ம் தேதி, தாய்மொழி கூட்டமைப்பு சார்பில் கன்னடர் -- தமிழர் ஒற்றுமை மாநாடு நடந்தது.
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற முதல்வர் சித்தராமையாவின் சட்ட ஆலோசகரும், விராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான பொன்னண்ணா, மடிகேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மந்தர் கவுடா, ஜெயநகர் பா.ஜ., -- எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, சிவாஜி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், தரிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் ஆகியோருக்கு நன்றி.
இதேபோல், கன்னடர் - தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தி, மிக சிறப்பாக பேசிய கர்நாடக ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா, கன்னட மேம்பாட்டு ஆணைய முன்னாள் தலைவர் எல்.ஜி.சித்தராமையா, கன்னட கவிஞர்கள், பாபு சஷிதர் தலைமையில் தமிழில் கவிதைகள் படைத்த தமிழ் கவிஞர்கள், மாநாட்டிற்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், வாகன ஏற்பாட்டு குழுவினர், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் அச்சிட்டு வழங்கியவர்கள், மேடை நிர்வாகம் உட்பட சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துணை அமைப்புகள், மாநாட்டை முன் நின்று சிறப்பாக நடத்தி வெற்றி பெற செய்த, மாநாட்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி., குமார் மற்றும் குழுவினருக்கு நன்றி.
இவ்வாறு அறிகையில் கூறப்பட்டுள்ளது.

