வேற்றுமையிலும் ஒற்றுமை பேணுவது அவசியம் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அறிவுரை
வேற்றுமையிலும் ஒற்றுமை பேணுவது அவசியம் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அறிவுரை
ADDED : ஜன 25, 2026 05:59 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், பழங்குடியின குழுக்களுடன் நடந்த கூட்டத்தில், வேற்றுமையில் ஒற்றுமை பேணுவதன் அவசியத்தை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் எடுத்துரைத்தார்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
விமர்சனம் இங்கு, பழங்குடியினர் நலனுக்காக, 'பெசா' எனப்படும் திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்ட பஞ்சாயத்துகள் சட்டம், 1996ல் இயற்றப்பட்டது.
இதற்கு, மாநில அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, 'பெசா' சட்ட விதிகளுக்கான அறிக்கை கடந்த 2ல் வெளியிடப்பட்டது. இதில், சில குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக ஜார்க்கண்ட் செ ன்ற ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பழங்குடியின குழுக்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா, சம்பாய் சோரன், பா.ஜ., முன்னாள் தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், காங்., - எம்.எல்.ஏ., ரமேஷ்வர் ஓரானின் மகள் நீஷா ஓரானும் பங்கேற்றார்.
சட்ட விதிகள் கூட் டத்தில், மத மாற்றம், பெசா சட்ட விதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து மோகன் பாகவத் திடம் பழங்குடியின குழுக்கள் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களிடம் நீஷா ஓரான் கூறியுள்ளதாவது:
நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், தர்மம் ஆகியவை, வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை கற்று தந்துள்ளதாக மோகன் பாகவத் எடுத்துரைத்தார்.
பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், சேருமிடம் ஒன்று தான். இது தான் சனாதன, ஹிந்து மற்றும் பாரதத்தின் தர்மம் என கூறினார்.
ஜார்க்கண்டில் அமலான, 'பெசா' சட்ட விதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து அவரிடம் விவாதித்தோம்.
சட்டத்தின் மையமாக விளங்கும் விதிகளில் சமூக மற்றும் மத நடைமுறைகள் குறித்து எதுவும் விளக்கப்படவில்லை.
இந்த குறைபாடு பழங்குடியின மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற் படுத்தும். பழங்குடியின மக்கள் நலன் சார்ந்து சட்ட விதிகள் உருவாக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

