ADDED : ஜன 23, 2024 01:57 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலை வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் பல கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17வது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 16ல் முடிகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதனால் 18வது லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 18வது லோக்சபா தேர்தலை வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் பல கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பட்டியலை அனுப்பியதாக கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

