ADDED : பிப் 26, 2024 07:34 AM
விஜயபுரா: ''பா.ஜ.,வினர் எனக்கு அநியாயம் செய்தனர்,'' என காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக, விஜயபுராவில் அவர் கூறியதாவது:
பா.ஜ.,வால் எனக்கு அநியாயம் நடந்தது. எங்களின் காணிக சமுதாயம் என்னுடன் நின்றது. வரும் நாட்களில் அனைத்தையும் பகிரங்கப்படுத்துவேன். இந்த சமுதாயத்தினருக்கு களங்கம் ஏற்பட கூடாது என, நான் பணியாற்றுகிறேன்.
என் கண்ணில் கண்ணீர் வந்த போது, மொத்த சமுதாயமும் எனக்கு ஆதரவாக நின்றது; கண்ணீரை துடைத்தது.
என் மனதில் அடக்கி வைத்துள்ள பல விஷயங்களை, நான் வெளிப்படுத்துவேன். மீண்டும் விஜயபுராவுக்கு வருவேன். எங்கள் சமுதாயம் எப்போதும், யார் முதுகிலும் குத்தியதில்லை. காணிக சமுதாயம் அனைவருடனும் நல்லுறவு வைத்துள்ளது.
வேறு சமுதாயத்துக்கு அவமதிப்பு ஏற்படாமல், எங்கள் சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும். இதன்படி எங்களின் திட்டங்கள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

