ADDED : ஏப் 21, 2024 12:04 PM

புதுடில்லி: ‛‛ மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக இந்தியா விளங்குகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் இத்தகைய நிகழ்ச்சியில் பங்கேற்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தியா, உலகின் பழமையான நாகரீகம் கொண்ட நாடு மட்டும் அல்ல. மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாகவும் உள்ளது. தனக்காக மட்டும் அல்லாமல் உலகம் முழுமைக்கும் இந்தியா சிந்திக்கிறது. கொள்கை பற்றி பேசும் நாடாக இந்தியா உள்ளது.
குழப்ப நிலையில் சிக்கி உள்ள இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்க்கிறது. உலகளாவிய தளங்களில் முழு நம்பிக்கையுடன் உண்மையையும், அஹிம்சையையும் இந்தியா முன்னெடுத்துச் செல்கிறது. உலகளாவிய பிரச்னைகளுக்கு இந்தியாவின் பழமையான கலாசாரம், பாரம்பரியத்தில், தீர்வு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

