ADDED : மார் 16, 2024 06:29 AM

ஹூப்பள்ளி: ''பெலகாவி தொகுதியில் போட்டியிடும்படி கூறியுள்ளனர். நான் போட்டியிடுகிறேன்; வெற்றி பெறுவேன். இது 100க்கு 100 சதவீதம் உறுதி,'' என, பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:
பெலகாவி தொகுதியில் போட்டியிடும்படி, கட்சி மேலிடம் கூறியது. நான் போட்டியிடுகிறேன். நான் ஏற்கனவே தொகுதி தலைவர்களுடன் பேசியுள்ளேன். எம்.பி., மங்களா அங்கடி, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியுடனும், பேச்சு நடத்தினேன்.
பெலகாவியில் நான் வெற்றி பெறுவேன். இது 100க்கு 100 சதவீதம் உண்மை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் என்னுடன் பேசினர். அதிகாரப்பூர்வமாக என்னை வேட்பாளராக அறிவித்த பின், பிரசாரத்தை துவக்குவேன்.
மகனுக்கு சீட் கிடைக்காததால், ஈஸ்வரப்பா அதிருப்தியில் உள்ளார். இவரை மேலிட தலைவர்கள் சமாதானம் செய்வர். எடியூரப்பா மீது பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் இருந்து அவர் குற்றமற்றவராக வெளியே வருவார்.
இவ்வாறு அவர்கூறினார்.

