கூச்ச சுபாவத்துடன் வளர்ந்தேன்; இது நடக்கும் என்று நினைக்கவில்லை; சுபான்ஷூ சுக்லா நெகிழ்ச்சி
கூச்ச சுபாவத்துடன் வளர்ந்தேன்; இது நடக்கும் என்று நினைக்கவில்லை; சுபான்ஷூ சுக்லா நெகிழ்ச்சி
UPDATED : ஆக 24, 2025 02:21 PM
ADDED : ஆக 24, 2025 02:16 PM

புதுடில்லி: ''நான் கூச்ச சுபாவத்துடன் வளர்ந்தேன். விண்வெளிக்கு பறப்பேன் என்று நினைக்கவில்லை'' என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.
டில்லியில் ஆக்சியம் 4 பயணத்தில் பங்கேற்ற தனது அனுபவத்தையும் விண்வெளி வீரர் சுக்லா பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
நான் கூச்ச சுபாவத்துடன் வளர்ந்தேன். விண்வெளிக்கு பறப்பேன் என்று நினைக்கவில்லை. இது குறித்து இளமை பருவத்தில் இருக்கும் போது ஒரு நாளும் கனவு கண்டதில்லை. நாம் நமது திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு இது ஒரு சிறந்த நேரம். ஆக்சியம் 4 திட்டம் தொடக்கம் தான். நமது கனவை நனவாக்க நான் இஸ்ரோ உடன் இணைந்து பணியாற்றுவேன். இந்த ஆக்சியம் திட்டம் வெற்றி அடைந்தது மிகப்பெரிய சாதனை.
மேலும் ககன்யான் மற்றும் இந்திய விண்வெளி நிலையம் போன்ற பணிகளும் நடந்து வருவதால் இது சரியான நேரத்தில் வந்துள்ளது. இவ்வாறு சுக்லா கூறினார்.