sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல்

/

தங்கவயல்

தங்கவயல்

தங்கவயல்


ADDED : ஜன 11, 2024 11:37 PM

Google News

ADDED : ஜன 11, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

4 செக்யூரிட்டிகள் 'சஸ்பெண்ட்!'


மாரிகுப்பம் பகுதியில், 'மாஜி' கவுன்சிலர் இருக்கிற வரைக்கும் அடங்கி கிடந்தவங்க, அவர் இல்லாததால் மைனிங் பகுதியில் கொள்ளையடிக்க,'தாதா' வேலையை தொடங்கிட்டாங்களாம்.

மைசூர் மைன் மில்லுக்குள் சட்ட விரோதமாக தங்க மண் திருடும் கும்பல் கைவரிசை காட்டி இருக்காங்க. ஏற்கனவே,வேலியே பயிரை மேய்கிறதென ஊரே பேசினது. அதை உறுதி செய்றாப்புல திருட்டு கும்பலுக்கு துணை போனதாக செக்யூரிட்டிகள் நாலு பேரை பிடித்து, 'சஸ்பெண்ட்' செய்துட்டாங்களாம்.

திருடின கும்பல் தப்பிச்சிட்டாங்களாம். ஆனால், காவலுக்கு இருந்த அந்த நான்கு பேரை பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட் செய்திருக்கிறாரு. வேலையே போன மாதிரிதானாம்.

மைன்சை மூடும்போது, இருந்த சொத்துக்கள் எவ்வளவு. அதை எங்கேன்னு கேட்டால் எத்தனை ஆபீசர்கள் கம்பி எண்ணுவார்களோ. சிவசமுத்ரா நீர் மின் நிலையத்தில் இருந்து கோல்டு மைன்ஸ் வரையில் மின் இணைப்புக்கு பயன்படுத்திய பல கோடி மதிப்புள்ள செம்பு கேபிள் என்னானதோ?

தலைவர் பெயரை மறைக்கலாமா?


கர்நாடக மாநில தலைநகர் சிட்டி ரயில் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகி பெயரை இணைத்தாங்க. அதை அமல்படுத்திட்டாங்க. ரயில்கள் வந்து, செல்லும் போதெல்லாம் அறிவிப்பின் போது அந்த 'மூன்றெழுத்து' தியாகி பெயரை தவறாமல் உச்சரிக்கிறாங்க.

அதேபோல தமிழகத்தின் சென்னை சென்ட்ரலுக்கு மூன்றெழுத்தில் முன்னாள் முதல்வர் பெயரை வெச்சிருக்காங்க. இந்த மூன்றெழுத்துப் பெயரை ப.பேட்டை ரயில் நிலைய அறிவிப்பிலும், கேபிடல் சிட்டியிலும், சொல்லுவதே இல்லை. 'பாரத ரத்னா' விருது பெற்ற அவர் பெயரை சொல்ல ஏன் மறுக்குறாங்களோ. ரயில்வே துறை இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரை சொல்லாமல் தவிர்த்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கல்தா கொடுக்க வேணும்னு, இலைகாரங்க ரயில்வே ஹெட் ஆபீசுக்கு தெரிவிச்சிருக்காங்க.

செங்கொடி சங்கம் யாருக்கு?


எம்ப்ளாய்ஸ் யூனியன் பேர்ல இருக்கிற செங்கொடி கட்சியின் யூனியனை,முறையாக அந்த கட்சிக்காரங்க தொழிலாளர் ஆணையத்தில், 'ரினிவல்' செய்யாமல் போனதால், அதன் உரிமையை இழந்துட்டாங்களாம். ஆனாலும், அந்த கட்சியில் ஒதுங்கி இருக்கும் ஒரு தொழிலாளி, சங்கத்தை ரினிவல் செய்து அவர் சார்ந்த குழுவுக்கு தான் சொந்தமுன்னு அங்கீகாரம் வாங்கிட்டாராம்.

இப்போ அந்த புகழ் பெற்ற யூனியன் ஆபீசும் கைநழுவ போகுதுன்னு சொல்றாங்க. இது நிஜமாவான்னு பல கேள்விகள் பிறந்திருக்கு. அதேபோல, மைசூர் மைன்ஸ் ஸ்கூலும் கூட அந்த சங்கத்துக்கு சொந்த மானது தான்னு சொல்றாங்க. அதன் நிர்வாக பொறுப்பிலும் மாற்றம் வரும்னு சந்தேகம் ஏற்பட்டிருக்குதாம்.

கோர்ட்டுக்கு போய் சங்கம் எங்களுக்கு சொந்தம்னு அந்த கட்சிக்காரங்க கேட்பாங்களா அல்லது கட்சி மட்டுமேஎங்களுக்கு போதும்னு சங்கத்துக்கு சங்கு ஊதிடுவாங்களான்னு அதன் அதிருப்தியாளர்கள் பேசுறாங்க.

கோவில் கொள்ளைக்கு ஆப்பு!


ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்டது உ.பேட்டையில் 1,000 ஆண்டு பழமையான கோவில். இதனை அரசு ஏற்று 30 ஆண்டுகள் ஆகிறது. இக்கோவிலின் வரவு, செலவு என்னானதென யாருக்குமே தெரியாமல் இருந்தது. அறநிலையத் துறையின் தாசில்தாராக பதவியில் இருப்பவர்களுக்கு கூட இக்கோவில் பற்றி அக்கறை இருந்ததாக தெரியவில்லை என, உண்மை அறிந்த, 'பக்தர்கள் குரல்'ஒலிக்க தொடங்கியது.

அறநிலையத் துறையின் மாநில, மாவட்ட, அதிகாரிகளுக்கு கோவிலில் கொள்ளை நடப்பதாக சிலர் தெரிவிச்சிருக்காங்க.

அதனால், நான்கு மாதங்களாக ஆபீசர்கள் இக்கோவிலில் கவனம் செலுத்தி இருக்காங்க. முதல் முறையாக, மூன்று மாத உண்டியல் வசூல் எண்ணிக்கையை நேற்று முன்தினம் தான் அரசு அதிகாரிகள் நடத்தினாங்க. 25,500 ரூபாய் இருந்ததை, வங்கியில் டிபாசிட் செய்துட்டாங்களாம்.

அடுத்து, கோவிலின் கல்யாண மண்டபமும் அரசு கட்டுப்பாட்டில் வரணும். அதன் வருமானமும் என்னானது என்பதையும் கவனிக்கணும்னு புகார் போயிருக்குதாம்.






      Dinamalar
      Follow us