sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேட்டதோ நிதி; கிடைத்ததோ வன்கொடுமை பழி லோக்சபாவில் வாயை விட்டு வம்பில் சிக்கிய பாலு

/

கேட்டதோ நிதி; கிடைத்ததோ வன்கொடுமை பழி லோக்சபாவில் வாயை விட்டு வம்பில் சிக்கிய பாலு

கேட்டதோ நிதி; கிடைத்ததோ வன்கொடுமை பழி லோக்சபாவில் வாயை விட்டு வம்பில் சிக்கிய பாலு

கேட்டதோ நிதி; கிடைத்ததோ வன்கொடுமை பழி லோக்சபாவில் வாயை விட்டு வம்பில் சிக்கிய பாலு


UPDATED : பிப் 07, 2024 08:09 AM

ADDED : பிப் 07, 2024 12:35 AM

Google News

UPDATED : பிப் 07, 2024 08:09 AM ADDED : பிப் 07, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லோக்சபாவின் நேற்றைய விவாதத்தின் போது, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் முருகனை பார்த்து, தி.மு.க., - எம்.பி., பாலு கூறிய வார்த்தை, சபையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மன்னிப்பு கேட்க கோரி பா.ஜ., உறுப்பினர்கள் தந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல், தி.மு.க., உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

லோக்சபாவின் கேள்வி நேரத்தின்போது, நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா பேசுகையில், ''தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய குழு மற்றும் தமிழக அரசின் குழு அறிக்கைகள் அளித்துள்ளன. அவை இரண்டுமே, மத்திய அரசின் முன் உள்ளன.

''உள்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி, நிவாரண நிதி எப்போது வழங்கப்படும். குஜராத் போன்ற, பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு நிகரான நிவாரணத் தொகை தமிழகத்துக்கும் கிடைக்குமா?'' என, கேள்வி எழுப்பினார்.

இதற்கு, உள்துறை இணைமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளிக்கையில், ''மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்புக்கு, மத்திய அரசு முன்கூட்டியே நிதியை ஒதுக்கி வருகிறது. 2010 -15க்கான பேரிடர் நிவாரண நிதியாக மட்டும், 33,591 கோடி ரூபாய்வழங்கப்பட்டு உள்ளது.

''அடுத்து வந்த 2015 - 20 கால கட்டத்தில், இந்த தொகை, 61,220 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அடுத்து, 2021 - 26 கால கட்டத்துக்கான தொகை 1.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது,''என்றார்.

'இந்த பதில் ஏற்புடைய தாக இல்லை' எனக்கூறி, தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர்.

சில நிமிடங்களுக்கு பின், மற்றொரு துணைக் கேள்வியாக, தி.மு.க., - எம்.பி., பாலு, பேசுகையில், ''தமிழக வானிலை ஆய்வு மையங்களில் உள்ள கருவிகள், சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன கருவிகளாக இல்லை.

''அவை காலவாதியான பழைய கருவிகளாக உள்ளன. இந்த கருவிகளால் முன்கூட்டியே எச்சரிக்க முடியாமல் போன காரணத்தினால், ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டனர்,''என்றார்.

உரிமை இல்லை


அப்போது சபையில் இருந்த மத்திய மீன் வளத்துறை இணையமைச்சர் முருகன் குறுக்கிட்டு, ''வானிலை மையம் போதிய எச்சரிக்கைகளை செய்தும்கூட, தமிழக அரசு நிர்வாகம் உரிய முறையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவில்லை,'' எனக் கூறியதும், சபையில் கடும் வாக்குவாதம் வெடித்தது.

ஆவேசமடைந்த பாலு, ''என்ன பேசுகிறீர்கள். நான் பேசும்போது ஏன் குறுக்கிடுகிறீர்கள். இது குறித்து பேச உங்களுக்கு உரிமை இல்லை. துறைக்கு சம்பந்தமில்லாதவர் நீங்கள்.

''என்ன நினைத்துக் கொண்டு என் பேச்சில் குறுக்கிடுகிறீர்கள். இந்த சபையில் எம்.பி.,யாக இருக்கக்கூட தகுதியற்றவர். அமைச்சராகவும் இருக்கவும் தகுதியற்றவர். அமருங்கள். என்னை எதிர்கொள்வதற்கான தெம்பும், திராணியும், உங்களுக்கு கிடையாது,'' என்றார்.

இதை கேட்ட பா.ஜ., - எம்.பி.,க்கள் கோபம் அடைந்தனர்.

பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், ''அமைச்சர் பொறுப்பில் இருப்பவரைப் பார்த்து, அமைச்சராக இருக்க தகுதியற்றவர் எனக் கூறிய பாலு மன்னிப்பு கேட்க வேண்டும். ஊழலில் திளைத்த நீங்கள்தான் தகுதியற்றவர்.

''அமைச்சராக இருந்தபோது அடித்த கொள்ளைக்காக, நீங்கள் தான் தகுதி இல்லாதவர். உங்களுக்கு துணை போன காங்கிரசும் தான் தகுதி அற்றது,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் பேசுகையில், ''முருகன் எங்கள் அமைச்சர். அவரை எப்படி நீங்கள் தரக்குறைவாக பேசலாம். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றால் உங்களுக்குஇளக்காரமாக போய்விட்டதா?

''பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் அவர். எங்கள் சகாவான அவரை, இஷ்டம் போல பேசுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவரைவிட உங்களுக்கு கூடுதலாக என்ன தகுதி உள்ளது.

''உங்கள் தகுதியைப் பற்றி நாங்கள் பேசலாமா. பேசினால் தாங்குவீர்களா. மூத்த அமைச்சராக பணியாற்றிய உங்கள் பேச்சு மிகவும் தவறானது. மன்னிப்பு கேளுங்கள்,''என்றார்.

இதையடுத்து ஆவேசமடைந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மன்னிப்புக்கேட்டே ஆக வேண்டுமென்று பா.ஜ., மூத்த அமைச்சர்களும், எம்.பி.,க்களும் வலியுறுத்ததுவங்கினர்.

வெளிநடப்பு


இதையடுத்து பாலு, முருகனை பற்றி பேசிய வார்த்தையை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர்அறிவித்தார்.

சபாநாயகர் ஓம் பிர்லா எவ்வளவோ சமாதானப்படுத்தியும், பா.ஜ., - எம்.பி.,க்கள் விடுவதாக இல்லை. இதையடுத்து என்ன நினைத்தனரோ தெரியவில்லை, பதில் ஆவேசம் காட்டிக் கொண்டிருந்த தி.மு.க., - எம்.பி.,க்கள், சத்தமில்லாமல் சபையைவிட்டுவெளியேறினர்.

இவர்களோடு சேர்ந்து, காங்., தேசியவாத காங்., இடதுசாரிகள் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர். திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இந்த வெளிநடப்பில் பங்கேற்கவில்லை.

'தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார்!'


இந்த விவகாரம் குறித்து நிருபர்களிடம் பாலு கூறியதாவது:தமிழக வெள்ள நிவாரண நிதி கேட்டு பேசிக் கொண்டிருந்தோம். உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துக் கொண்டிருக்கும் போது, அந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத முருகன் குறுக்கிட்டார். மாநில பேரிடர் நிவாரண நிதி இருக்கிறதே என்ற ரீதியில் அவர் பேசினார்.
நாங்கள் கேட்பது வேறு, அவர் கூறுவது வேறு. இதன் வாயிலாக தமிழகத்துக்கு அவர் துரோகம் இழைக்கிறார். அதனால் தான் அவரை, 'அன்பிட்' என்றேன். உடனே தலித் அமைச்சரை, 'அன்பிட்' என கூறியதாக திரித்துப் பரப்பக் கூடாது. அப்படி பார்த்தால் எங்கள் எம்.பி., ராஜாவும் தலித் தானே.இவ்வாறு அவர் கூறினார்.



ஏன் இந்த அவதுாறு?


மத்திய இணையமைச்சர் முருகன் கூறுகையில், ''ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக இருப்பதை தி.மு.க.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே தான் என்னையும், நான் சார்ந்த பட்டியல் இனத்தையும் அவதுாறு செய்யும் வகையில் பேசுகின்றனர்,'' என்றார்.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us