ADDED : டிச 21, 2025 03:36 AM

திருவனந்தபுரம்: டிச. 21-: கேரள சினிமாவின் மூத்த நடிகரும், இயக்குநரும், கதாசிரியருமான சீனிவாசன், 69, உ டல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
கேரள திரையுலகில், 50 ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை வழங்கி வந்த மூத்த நடிகரும், இயக்குநருமான சீனிவாசன், எர் ணாகுளம் மாவட்டத்தில் கொச்சியை அடுத்த கந்தநாட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில ஆண்டு களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மாதந்தோறும், 'டயாலிசிஸ்' எனப்படும் ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்தது.
உடல்நல குறைவு கொச்சியின் திரிபுணிதுராவில் உள்ள மருத்துவமனைக்கு வழக்கம் போல் டயாலிசிஸ் செய்ய சீனிவாசன் நேற்று முன் தினம் அழைத்துச் செல்லப் பட்டார்.
அப்போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நேற்று காலை 8:22 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள தலசேரிக்கு அடுத்த பட்டியத்தில் பிறந்த சீனிவாசன், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
ந டிப்பு மற்றும் எழுத்தின் மீது இருந்த தீராத காதல் காரணமாக, சென்னை வந்த அவர், தமிழ்நாடு திரைப்படக் கல்லுாரியில் சேர்ந்து நடிப்புத் துறையில் பயிற்சி பெற்றார். இதே, திரைப்படக் கல்லுாரியில் நடிகர் ரஜினிகாந்தும் இவருடன் படித்தார்.
கடந்த 1976ல், மலையாளத்தில் வெளியான மணிமுழக்கம் என்ற படத்தின் வாயிலாக கேரள திரையுலகில் அடியெடுத்து வைத்த சீனிவாசன், 50 ஆண்டுகளில் 225க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
பல படங்களுக்கு சீனிவாசன் கதை, திரைக்கதை எழுதி உள்ளார்.
இதில், காந்திநகர் 2வது தெரு, கத பறயும் போல், நாடோடிக்காத்து ஆகியவை தமிழில் அண்ணாநகர் முதல்தெரு, குசேலன், கதாநாயகன்' என்ற பெயரில் ரீமேக் ஆனது.
இரங்கல் கடந்த 2019 வரை திரைப்படங்களில் நடித்து வந்த இவர், பின் உடல் நலக் குறைவு காரணமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். பன்முகத் திறன் கொண்ட சீனிவாசனின் மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த சீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத், தியான் என்ற மகன்களும் உள்ளனர்.
சீனிவாசனின் உடல் எர்ணாகுளத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதை அடுத்து, நேற்று அவரது சொந்த ஊரான உதயம்பேருர் எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு, அவரின் இறுதிச்சடங்குகள் இன்று நடக்கின்றன.

