கத்தாரில் தூக்கு தண்டனை கைதிகள் விடுதலை: பிரதமர் மோடிக்கு நன்றி
கத்தாரில் தூக்கு தண்டனை கைதிகள் விடுதலை: பிரதமர் மோடிக்கு நன்றி
UPDATED : பிப் 12, 2024 04:34 PM
ADDED : பிப் 12, 2024 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கடற்படை வீரர்கள் விடுதலையாகி இன்று(பிப்.,12) காலை புதுடில்லி வந்தடைந்தனர்.
கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கைது செய்தது. அவர்களை கடந்த 18 மாதங்களாக கத்தார் தடுப்பு காவலில் வைத்திருந்தது.
இந்திய வெளியுறவுத்துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் வெற்றியாக எட்டு முன்னாள் கடற்படை வீரர்களை கத்தார் விடுதலை செய்தது. கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவி்த்தனர்.

