சுற்றுச்சூழல் ஆர்வலர் மீண்டும் போராட்டம்: ‛லே' பகுதியில் 144 தடை உத்தரவு
சுற்றுச்சூழல் ஆர்வலர் மீண்டும் போராட்டம்: ‛லே' பகுதியில் 144 தடை உத்தரவு
ADDED : ஏப் 06, 2024 07:20 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சீன எல்லையான ‛‛லே'' நோக்கி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் லடாக், பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கிட கோரியும், இமயமலை பகுதி சூழலியலை பாதுகாக்கவும், அப்பகுதியைச்சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் கல்வி சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக் என்பவர் கடந்த மார்ச் 6ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கினார்.இவரது போராட்டத்திற்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தன் எழுச்சியாக திரண்டு பங்கேற்றனர். பின்னர் அரசு நிர்வாகம் தலையீட்டின் பேரில் மார்ச் 28-ல் உண்ணாவிரதத்தை முடித்தார்.
இந்நிலையில் மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்த சோனம் வாங்சுக், நாளை (ஏப்.07) இந்திய-சீன சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியான ‛லே' நோக்கி பயணத்தை துவக்க திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ‛ லே' பகுதி போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

