எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பா.ஜ.,வுக்கு ஸ்வாதி மாலிவால் வேண்டுகோள்
எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பா.ஜ.,வுக்கு ஸ்வாதி மாலிவால் வேண்டுகோள்
UPDATED : மே 17, 2024 05:13 PM
ADDED : மே 17, 2024 10:41 AM

புதுடில்லி: ‛‛ நான் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம்'', என ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
வழக்குப்பதிவு
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முக்கியமான தேர்தல்
இது தொடர்பாக ஸ்வாதி மாலிவால் கூறியதாவது: எனக்கு நடந்தது மோசமானது. எனது வாக்குமூலத்தை போலீசில் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்காக வேண்டிக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாட்டில் முக்கியமான தேர்தல் நடக்கிறது. ஸ்வாதி மாலிவால் முக்கியமல்ல. இந்த விவகாரம் நாட்டிற்கு முக்கியமானது அல்ல. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என பா.ஜ.,வுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

