sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் உறவினர் உட்பட 2 பேர் கைது: மடிக்கணினிகள் திருட்டு

/

 தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் உறவினர் உட்பட 2 பேர் கைது: மடிக்கணினிகள் திருட்டு

 தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் உறவினர் உட்பட 2 பேர் கைது: மடிக்கணினிகள் திருட்டு

 தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் உறவினர் உட்பட 2 பேர் கைது: மடிக்கணினிகள் திருட்டு

10


UPDATED : ஜன 08, 2026 12:44 AM

ADDED : ஜன 08, 2026 12:31 AM

Google News

10

UPDATED : ஜன 08, 2026 12:44 AM ADDED : ஜன 08, 2026 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் உள்ள தங்கும் விடுதிகளில், மடிக்கணினிகள் திருடிய வழக்கில், தமிழகத்தின் சங்கராபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியன் உறவினர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்க ளூரு எலக்ட்ரானிக் சிட்டி தொட்டதோகூரில் உள்ள, 'பேயிங் கெஸ்ட்' எனும் பி.ஜி., விடுதிக்குள், கடந்த டிச., 1ம் தேதி புகுந்த மர்ம நபர், ஒரு அறைக்குள் நுழைந்து, 'சார்ஜ்' போடப்பட்டு இருந்த மடி க்கணினியை திருடி சென்றார்.

பி .ஜி., நிர்வாகிகள் அளித்த புகாரின்படி, எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், டிச., 11ம் தேதி, தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜதுரை, 33, என்பவரை கை து செய்தனர்.

இவ ரிடம் நடத்திய விசாரணையில், இதற்கு முன்பும் பல பி.ஜி.,க்களில் புகுந்து, மடிக்கணினிகளை திருடியது தெரிந்தது.

திருடிய மடிக்கணினிகளை, தன் நண்பரான கணினி அறிவியல் பொறியியல் பட்டதாரி கவுதம், 30, என்பவரிடம் கொடுத்ததும், மடிக்கணினியில் உள்ள பழுதுகளை அவர் சரி செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததும், அதில் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ததும் தெரிந் தது.

இதையடுத்து, டிச., 19ம் தேதி கவுதமை கைது செய்ய, சங்கராபுரத்திற்கு, எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் சென்றனர்.

க வுதம், சங்கராபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியனின் உறவினர் என்பதால், அவரை கைது செய்ய, உள்ளூர் போலீசார் உதவி செய்ய மறுத்துள்ளனர். இதை, பெங்களூரு உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு, எலக்ட்ரானிக் சிட்டி டி.சி., நாராயணா கொண்டு சென்றார்.

அவர்கள், தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசியதை அடுத்து, அடுத்த சில நாட்களில் உள்ளூர் போலீசார் உதவியுடன், கவுதம் கைது செய்யப்பட்டார். கைதான இருவரிடம் இருந்து, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 48 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்ட ன.

துபாயில் வேலை செய்த கவுதம், மூன்று ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். பின், துபாய் செல்லாமல் இங்கேயே வசித்து, திருட்டில் ஈடுபட்டுள்ளார். இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், நேற்று இத்தகவல்களை தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us