ADDED : டிச 23, 2025 07:33 AM

திருப்பதி: மருத்துவத் தாவரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் திருமலையில் தெய்வீக மூலிகைத் தோட்டம் அமைக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஆந்திராவின் திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.
கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், கோவில் அமைந்துள்ள சேஷாசல வனப்பகுதியில் உள்ள அரிய மற்றும் அழிந்து வரும் மருத்துவ தாவர வகைகளை பாதுகாக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, திருமலையில் ஒரு தெய்வீக மூலிகைத் தோட்டத்தை அமைக்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் உள்ள ஜி.என்.சி., சுங்கச்சாவடிக்கு அருகே, கீழ் மற்றும் மேல் மலைப்பாதை சாலைகளுக்கு இடையே நான்கு ஏக்கர் பரப்பளவில் இந்த மூலிகைத் தோட்டத்தை, 4.25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க உள்ளனர்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

