டில்லியில் நொடிப்பொழுதில் நொறுங்கிய 4 மாடி கட்டடம்: 5 பேர் உயிரிழப்பு
டில்லியில் நொடிப்பொழுதில் நொறுங்கிய 4 மாடி கட்டடம்: 5 பேர் உயிரிழப்பு
UPDATED : ஜூலை 12, 2025 05:23 PM
ADDED : ஜூலை 12, 2025 10:18 AM

புதுடில்லி: டில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
வடகிழக்கு டில்லியின் சீலம்பூர் பகுதியில் உள்ளது ஜனதா மஸ்தூர் காலனி. இங்குள்ள 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இன்று(ஜூலை 12) திடீரென இடிந்து விழுந்தது.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கட்டட இடிபாடுகளில் 12 பேர் வரை சிக்கி இருக்கக்கூடும் என்பதால் அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் இறங்கி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் 4 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர்.
மீட்புப் பணிகளின் போது ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டு உள்ளது. மற்றவர்களின் நிலைமை என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. கட்டடம் எப்படி இடிந்து விழுந்தது என்பது பற்றிய எந்த விவரங்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளை சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.5 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணி நடக்கிறது.