தொழில்நுட்பங்களை மேம்படுத்த டில்லி ஜல் போர்டு திட்டம்
தொழில்நுட்பங்களை மேம்படுத்த டில்லி ஜல் போர்டு திட்டம்
ADDED : நவ 06, 2025 12:48 AM
புதுடில்லி: தொழில் நுட்ப அமைப்புகளை மாற்றியமைக்கவும், திட்டங்களை கண்காணிக்க, 'ஆன் - லைன்' அமைப்பை உருவாக்கவும், இந்தப் பணிகளை பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் டில்லி ஜல் போர்டு திட்டமிட்டுள்ளது.
டில்லி ஜல் போர்டு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லி மாநகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்களை டில்லி ஜல் போர்டு செயல்படுத்தி வருகிறது. டில்லியில், 29 லட்சம் பேர் ஜல் போர்டின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.
ஜல் போர்டில் தற்போது உள்ள தொழில் நுட்ப வசதிகள், பணிகளில் வேகத்தை அதிகரிக்க ஒத்துழைக்கவில்லை. எனவே, தொழில் நுட்ப அமைப்புகளை முற்றிலும் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, திட்டங்களின் பணிகளைக் கண்காணித்து மேம்படுத்த, 'ஆன் - லைன்' அமைப்பையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள பயன்பாடுகளை கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தளங்களை உருவாக்குதல் ஆகியவை ஏற்படுத்தப்படும்.
இந்த நடவடிக்கையால், டில்லி ஜல் போர்டின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக மேம்படும். மேலும், குடிநீர் மேலாண்மையில் மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

