கிரிப்டோ கரன்சி , டார்க்வெப்செயலி, போதைபொருள் பரிமாற்றம் : தொழில் நுட்ப வல்லுநர் கைது
கிரிப்டோ கரன்சி , டார்க்வெப்செயலி, போதைபொருள் பரிமாற்றம் : தொழில் நுட்ப வல்லுநர் கைது
UPDATED : ஆக 10, 2024 10:39 PM
ADDED : ஆக 10, 2024 10:35 PM

ஹைதராபாத்:கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி டார்க் வெப் செயலி மூலம் போதை பொருள் வாங்கிய தெலங்கானாவை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் போதைபொருள் அதிகரித்து வருவதாக மாநில போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.
துறையினரின் தீவிர நடவடிக்கை காரணமாக டார்க் வெப் செயலி மூலம் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாகவும், அதற்கு கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது
தொடர் விசாரணையில் அசாம் மாநிலம் சில்புகுரியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ஸ்பீட் போஸ்ட் மூலம் போதை பொருளை தெலங்கானா தொழில்நுட்பவல்லுநருக்கு வினியோகித்திருப்பது கண்டறியப்பட்டது.
ஸ்பீட் போஸ்ட் பார்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. அப்போது குறிப்பிட்ட தொழில் நுட்ப வல்லுநருக்கு வந்த ஸ்பீட் போஸ்ட் பார்சலை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். பார்சலில் போதை பொருள் டெலிவரி செய்யப்பட்டு இருப்பதையும், அதற்கு அத்தாட்சியான சரக்கு எண்ணும் பகிரப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து பார்சலை கைப்பற்றியதுடன் தொழில்நுட்ப வல்லுநரையும் கம்மம் போலீசார்கைது செய்தனர். தொடர்ந்து தொழில் நுட்ப வல்லுநரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கும், அவரது பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

