sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுல் அடுத்த கட்ட பாத யாத்திரையை துவக்கினார்!

/

ராகுல் அடுத்த கட்ட பாத யாத்திரையை துவக்கினார்!

ராகுல் அடுத்த கட்ட பாத யாத்திரையை துவக்கினார்!

ராகுல் அடுத்த கட்ட பாத யாத்திரையை துவக்கினார்!


UPDATED : ஜன 16, 2024 02:58 AM

ADDED : ஜன 14, 2024 11:00 PM

Google News

UPDATED : ஜன 16, 2024 02:58 AM ADDED : ஜன 14, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தவ்பால்: லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று மணிப்பூரில் துவக்கினார்.

கடந்த 2022ம் ஆண்டு, செப்., 7ல் பாரத் ஒற்றுமை யாத்திரையை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் துவக்கினார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் துவங்கி, 2023, ஜன., 30ல் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவு பெற்றது.

இதன் வாயிலாக, தமிழகம், கேரளா உட்பட 12 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்களை, 126 நாட்களில் கடந்து பாத யாத்திரையை ராகுல் நிறைவு செய்தார்.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மீண்டும் ஒரு பாத யாத்திரையை நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் மேற்கொள்ள வேண்டும் என, காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட யாத்திரையை காங்., அறிவித்தது. இதற்கு, பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை என பெயரிடப்பட்டது.

இந்த யாத்திரையை, மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில் துவக்க திட்டமிடப்பட்டது. அதற்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுத்தது. பின், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில், ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை நேற்று துவங்கியது.

முன்னதாக, தவ்பால் நகரின் கோங்ஜோமில் உள்ள போர் நினைவு சின்னத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல், இரண்டாம் கட்ட யாத்திரையை துவக்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:


கடந்த 2004ல் இருந்து நான் அரசியலில் உள்ளேன். முதன்முறையாக நாட்டின் முழு உள்கட்டமைப்பும் சரிந்த ஒரு இடத்துக்கு வந்திருக்கிறேன். ஜூன் 29க்கு பின், மணிப்பூர், மணிப்பூராக இல்லை. அது பிளவுப்பட்டு, எங்கும் வெறுப்பு பரவியது.

லட்சக்கணக்கான மக்கள், இழப்பை சந்தித்துள்ளனர். தங்கள் கண்ணெதிரிலேயே பிரியமானவர்களை இழந்துள்ளனர்.

ஆனால், இதுவரை பிரதமர் மோடி உங்களின் கண்ணீரை துடைத்து, கரங்களை பற்றிக் கொள்ள வரவில்லை. இது வெட்கக்கேடான விஷயம். ஒருவேளை பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாக நினைக்கவில்லையோ?

மணிப்பூர் பா.ஜ.,வின் அரசியல் சின்னம். அக்கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வெறுப்பின் சின்னம். மணிப்பூர் பா.ஜ.,வின் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்தத்தின் சின்னம்.

நீங்கள் மதித்த அனைத்தையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். அவற்றை நாங்கள் மீண்டும் உங்களுக்கு திருப்பித் தருவோம். மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் உணர்கிறோம். உங்கள் காயம், இழப்பு துயரத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

நீங்கள் மதிப்பு வைத்திருந்தவற்றை உங்களுக்கு நாங்கள் திருப்பி வழங்குவோம். நல்லிணக்கம், அமைதி, இந்த பிராந்தியத்தில் அறியப்பட்ட இணக்கம் ஆகியவற்றை நாங்கள், உங்களுக்கு திருப்பித் தருவோம் என உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை துவக்கி வைத்த காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

கடலில் குதித்து ஆழ்கடல் நீச்சல் அடிக்க பிரதமர் மோடிக்கு நேரமிருக்கிறது. ஆனால், மணிப்பூர் மக்கள் துன்பத்தில் இருக்கும் போது முகத்தை காட்டக்கூட நேரமில்லை. 'ராம் ராம்' என கோஷமிடும் மோடி, ஓட்டுக்காக இப்படி நடந்து கொள்ளக் கூடாது.

பா.ஜ., மதத்தையும், அரசியலையும் கலந்து மக்களை துாண்டுகிறது. அத்தகைய அணுகுமுறையை அக்கட்சி மேற்கொள்ளக்கூடாது. சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்திற்காக காங்., நிற்கிறது.

அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றவும், பாசிச சக்திகளுக்கு எதிராக போராடவும் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த யாத்திரை, மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீஹார் உட்பட 14 மாநிலங்களில் நடக்கிறது. மொத்தம் 6,713 கி.மீ., துாரம் உடைய இந்த யாத்திரை 100 லோக்சபா தொகுதிகள், 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பஸ் வாயிலாகவும், நடைபயணமாவும் யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையில் மார்ச் 20 அல்லது 21ல் யாத்திரை முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரையில் டேனிஷ் அலி!


பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., டேனிஷ் அலி, ராகுலின் ஒற்றுமை யாத்திரையின் துவக்க நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். பின், ராகுல் சென்ற பஸ்சில் ஏறி, யாத்திரையில் இணைந்து கொண்டார்.
முன்னதாக இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:எனக்கும், எனது மதத்துக்கும் எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் பார்லி.,யில் அவதுாறாக பேசினார். அவரை தண்டிப்பதற்கு பதிலாக, ஆளும் கட்சி அவருக்கு வெகுமதி அளித்தது. என் கடினமான நேரத்தில், எனக்கு ஆதரவு தெரிவித்த முதல் தலைவர் ராகுல் தான்.அவரின் இந்த யாத்திரையின் நோக்கம், அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். ஒற்றுமை மற்றும் நீதிக்கான மிகப்பெரிய யாத்திரையில் நான் சேராவிட்டால், அரசியல்வாதியாகவும், சமூக சேவகனாகவும் என் கடமையை செய்ய தவறியவனாகி விடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பார்லி., சிறப்பு கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் பேசிய பா.ஜ., - எம்.பி., ரமேஷ் பிதுாரி, டேனிஷ் அலியை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பார்லி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டேனிஷ் அலியை, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அக்கட்சி தலைவர் மாயாவதி கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்தார்.








      Dinamalar
      Follow us