ADDED : டிச 16, 2024 11:26 PM

'இண்டி' கூட்டணி தலைவர்கள் மம்தா
பானர்ஜி, சரத் பவார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூறுவதை காங்கிரஸ் புரிந்து
கொள்ள வேண்டும். இனியும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அக்கட்சி
குற்றஞ்சாட்டக் கூடாது. தங்கள் தவறை காங்., உணர வேண்டும்.
பிரஹலாத் ஜோஷி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
மணிப்பூர் செல்லாதது ஏன்?
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுகிறது. ஒன்றரை ஆண்டுகளாகியும், அம்மாநிலத்துக்கு செல்ல பிரதமர் மோடிக்கு ஏன் நேரம் கிடைக்கவில்லை? உலகை சுற்றும் அவர் மணிப்பூருக்கு செல்லாதது ஏன்?
மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்.,
அரைச்ச மாவு வேண்டாம்!
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய பா.ஜ., அரசு செயல்படுவதாக, உத்தவ் சிவசேனா தரப்பைச் சேர்ந்த சஞ்சய் ராவத் தினந்தோறும் பேசி வருகிறார். தேர்தல்கள் முடிந்து விட்டன. அரைச்ச மாவையே அவர் இன்னும் அரைக்க வேண்டாம். புதிதாக அவர் முயற்சிக்க வேண்டும்.
ஷைனா என்.சி.,
சிவசேனா

