ADDED : பிப் 14, 2024 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில், மேற்கு வங்க கவர்னரின் பாதுகாப்பு கார் மீது மற்றொரு கார் மோதியது. அதன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ், டில்லிக்கு நேற்று முன் தினம் வந்தார்.
மாலையில், மேற்கு டில்லி இந்தர்புரியில் அவரது கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, திடீரென புகுந்த ஒரு கார், கவர்னர் பாதுகாப்புக்கு வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த இந்தர்புரி போலீசார், கவர்னர் கான்வாய்க்குள் நுழைந்த காரின் டிரைவரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

