தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்; சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்

காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்; சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்

காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்; சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்

38


UPDATED : செப் 22, 2026 08:55 AM

ADDED : செப் 22, 2026 08:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 08:55 AM ADDED : செப் 22, 2026 08:51 AM

38


38
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டத்தை இன்று (செப் 22) சென்னை திருவான்மியூரில் முதல்வர் விஜய் துவங்கி வைத்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 'முதல்வரின் காலை உணவு திட்டம்' கடந்த தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய, தமிழக வெற்றிக்கழக அரசு முடிவெடுத்தது.

இந்த திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என மாற்றியும், தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்ட விரிவாக்கத்தின் துவக்க விழா இன்று (செப் 22) நடந்தது. சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் விஜய் உணவு பரிமாறினார்; அவர் மாணவ, மாணவிகளுடன் இணைந்து தரையில் அமர்ந்து உணவருந்தினார். மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.

இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!



விரிவாக்கம் செய்யப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us