சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
ADDED : ஆக 15, 2025 06:33 AM

மும்பை: வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, வரும் அக்., 4ம் தேதி அமலுக்கு வருவதாக ஆர்.பி.ஐ., அறிவித்துள்ளது. இதனால், தற்போது காசோலை பரிவர்த்தனைக்கு, இரண்டு நாட்கள் வரை ஆகும் நிலையில், இனி, மின்னணு பணப்பரிமாற்றம் போலவே, சில மணி நேரத்தில் பணம் வரவு வைக்கப்படும்.
இது குறித்து ஆர்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தற்போது சி.டி.எஸ் எனப்படும் காசோலைக்கு ஒப்புதல் அளிக்கும் முறையில், பேட்ஜ் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இனி, அவை தொடர்ச்சியான, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்துவதுடன், தேவையற்ற தாமதத்தை குறைத்து, வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக புதிய நடைமுறை, வரும் அக்., 4ம் தேதி மற்றும் 2026 ஜன., 3ம் தேதி என இரண்டு கட்டமாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.