sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அழைப்பு

/

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அழைப்பு

11


UPDATED : ஆக 15, 2025 10:17 AM

ADDED : ஆக 15, 2025 10:05 AM

Google News

11

UPDATED : ஆக 15, 2025 10:17 AM ADDED : ஆக 15, 2025 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : இந்தியாவின் வளர்ச்சியே குறிக்கோள் என்றும், இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் பல்வேறு துறைகளில் எடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய கண்டுபிடிப்புகள் சிந்தனைகளுடன் நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்க இளைஞர்கள் முன்வர வேண்டும், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் அவர்களுடன் தானும் இணைந்து பணியாற்றுவதுடன் , இளைஞர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் பிரதமர் மோடி சுதந்திரதின கொடியேற்றி பேசுகையில் அழைப்பு விடுத்தார்.



டில்லி செங்கோட்டையில் இந்திய சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் தியாகிகளின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரை விவரம் வருமாறு :

நாடு இன்று சுதந்திர தினத்தை பெருமையாக கொண்டாடுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் தியாகம் செய்துள்ளனர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அரசியலமைப்பு இந்தியாவின் ஒளிவிளக்கு.

தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக செல்ல முடியாது

சமீபத்திய பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் பலத்தை உலகிற்கு பறை சாற்றியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை நினைத்து பார்க்கிறேன். அவர்களை வணங்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. இதனை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவம் பாடம் புகட்டியது. பல 100 கி.மீட்டர் தூரம் உள்ளே சென்று எதிரிகளை அழித்தோம். பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை பொறுத்து கொள்ள மாட்டோம். இந்தியா எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் இயல்பை காட்டுகிறது. தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக செல்ல முடியாது. எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கு எப்போது தாக்குதல் என்பதை நமது படை தீர்மானிக்கும். இந்திய ராணுவம் முழு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

முன்னேற்றம் நோக்கி.,


எரிபொருளுக்கு யாரையும் சார்ந்து இந்தியா இருக்கக்கூடாது. சூரிய ஒளி சக்தியை பெருக்குவோம். இந்திய விண்வெளி துறையில் பெரும் அளவில் சாதித்து வருகிறோம். விண்வெளியில் இந்தியாவுக்கான ஒரு தனி இடம் உருவாக்குவோம். இது தொழில்நுட்ப உலகம். விண்வெளி துறையில் இந்தியாவின் 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுகிறது. பெட்ரோல், டீசல் காஸ் இறக்குமதியை குறைக்க முயற்சிக்கிறோம். வளர்ந்த நாடாக சுயச்சார்பு மிக அவசியம்.



டிஜிட்டல் துறையில் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக யுபிஐ மற்றும் வங்கி பரிமாற்றத்தில் பெரும் சாதனை படைத்துள்ளோம்.


கோவிட் தடுப்பூசியை நாமே தயாரித்து நமது பெருமையை உலகிற்கு அறிய செய்தோம். கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றினோம். உலகச்சந்தையை இந்தியா ஆட்கொள்ள வேண்டும். இந்தியர்கள் உருவாக்கிய பொருட்களையே வாங்குவோம். கடந்த காலங்களில் சுதந்திரத்திற்காக பாடுபட்டோம். தற்போது சுயச்சார்பு இந்தியாவுக்காக உழைப்போம். மீனவர்கள் , விவசாயிகள் நலன் விஷயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது. இந்தியாவின் தண்ணீர் இந்தியாவுக்கே, பிற நாட்டு விவசாய நிலங்களுக்கு தர மாட்டோம். சிந்து நதி நீர் நமக்கு மட்டுமே.

இளைஞர்களே சொந்த தயாரிப்புகளை உருவாக்க வாருங்கள். புதிய யோசனை, சிந்தனையுடன் இளைஞர்கள் வாருங்கள். நான் இளைஞர்களுடன் இருக்கிறேன். வாருங்கள் வரலாறு படைப்போம். ஒரு லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்படுகிறது.



இளைஞர்களுக்காக ரூ.1லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்படும். புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 3.5 கோடி இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும். புதிதாக தனியார் துறையில் பணியில் இணையும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தீபாவளிக்கு பரிசு

நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். 2047 ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us