'எந்த கோணத்தில் ஸ்ட்ராங் முதல்வர்' சித்தராமையாவுக்கு பா.ஜ., கேள்வி
'எந்த கோணத்தில் ஸ்ட்ராங் முதல்வர்' சித்தராமையாவுக்கு பா.ஜ., கேள்வி
ADDED : மார் 21, 2024 03:11 AM
பெங்களூரு: 'நீங்கள், எந்த கோணத்தில், ஸ்ட்ராங் முதல்வர்' என, பா.ஜ,, கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று கூறியதாவது:
சித்தராமையா, எந்த சீமை ஸ்ட்ராங்க் முதல்வர்? எந்த கோணத்தில் ஸ்ட்ராங் முதல்வர்?
இவர் முதல்வரான ஒரு மாதத்துக்குள், ஆளுங்கட்சிக்கு எதிராக எம்.எல்.ஏ., ஒருவர் பகிரங்க கடிதம் எழுதினார். இவரது முதல்வர் நாற்காலி வேலிடிடி, லோக்சபா தேர்தல் முடியும் வரை மட்டுமே.
தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு, 1 பைசா நிதியுதவி வழங்கவில்லை என, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் முதல்வரை தினமும் வசைபாடுகின்றனர். தான் கூறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்யவில்லை என, முதல்வரின் மகனே அதிருப்தியில் கேள்வி எழுப்பினார்.
சித்தராமையா அரசுக்கு, ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்பே, 692 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பல்வேறு இடங்களில் கலவரம், குண்டுவெடிப்பு, பெண்களின் மீது பட்டப்பகலில் பெண்கள் மீது தாக்குதல், கூட்டு பலாத்காரம் அதிகரிக்கிறது.
முதல்வராக எட்டு மாதங்கள் கடப்பதற்குள், கர்நாடகாவுக்கு மிக அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் என்ற களங்கம் ஏற்படுத்தினார். இத்தனை அவலங்களுக்கு இடையே, 'உங்களை ஸ்ட்ராங் முதல்வர்' என, அழைத்துக் கொண்டால், இது தற்பெருமை அல்லாமல் வேறு என்ன?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

