100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
ADDED : டிச 18, 2025 03:08 PM

புதுடில்லி: மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் ஜி ராம் ஜி மசோதா கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நிறைவேறியது.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத்திட்டம்) உறுதி சட்டத்தை, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என பெயர் மாற்றப்பட்டது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டது. செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீமாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகப் படுத்தினார். திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் மசோதா மீதான விவாதம் நடந்தது.
இன்றைய கூட்டத்தொடரில், மசோதா நகலை எதிர்க்கட்சி எம்பிக்கள் கிழித்து வீசி அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

