பீஹாரில் 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணம் சமர்ப்பிப்பு; தேர்தல் ஆணையம் தகவல்
பீஹாரில் 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணம் சமர்ப்பிப்பு; தேர்தல் ஆணையம் தகவல்
UPDATED : ஆக 24, 2025 04:17 PM
ADDED : ஆக 24, 2025 03:43 PM

புதுடில்லி: பீஹாரில் 98 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலை அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பட்டியல் பற்றி ஏதேனும் ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவவர்களுக்கு செப்.1ம் வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்து இருந்தது.
இந் நிலையில் பீஹாரில் 98.2 சதவீதம் வாக்காளர்களின் அடையாள ஆவணங்கள் பெறப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் மேலும் கூறியதாவது;
ஜூன் 24ம் தேதி தொடங்கிய சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களிடம் இருந்து அடையாள ஆவணங்கள் பெறப்பட்டன. இதுவரை 98.2 சதவீதம் வாக்காளர்கள், தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர். செப்.1ம் தேதிக்குள் எஞ்சிய வாக்காளர்கள் (1.8 சதவீதம்) தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்துக் கொள்ளலாம்.
வழக்கமாக வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை மட்டுமின்றி, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போதும் சமர்ப்பிக்க தவறியவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.