பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்க விருப்பம்
பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்க விருப்பம்
ADDED : ஆக 01, 2025 07:31 PM

புதுடில்லி: பிரதமர் மோடியை, பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் தலைமையிலான நிர்வாகிகள் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அப்போது, பிரசாந்தி நிலையம் வந்து பகவான் சத்யசாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவரின் ஆசியை பெற விரும்புவதாக பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடியை சத்யசாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் தலைமைமையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ரியுகோ ஹிரா, எஸ்.எஸ்.நாகானந்த், ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா ஆகியோர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சென்று சந்தித்து பேசினர்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், பகவான் சத்யசாய்பாபாவுடன் மறக்க முடியாத தனது நினைவுகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியதுடன், இந்த விழாவில் பங்கேற்குமாறு அறங்காவலர்கள் அழைப்பு விடுத்தனர்.
அப்போது பிரதமர் மோடி பிரசாந்தி நிலையம் வந்து பகவானின் ஆசியை பெறவும், நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் விரும்புவதாக உறுதியளித்தார்.