/
செய்திகள்
/
இந்தியா
/
பெங்., குடிநீருக்காக காவிரியில் 4,579 கன அடி திறப்பு தமிழகத்திற்கு செல்வதாக விவசாயிகள் போராட்டம் பெங்., குடிநீருக்காக காவிரியில் 4,579 கன அடி திறப்பு தமிழகத்திற்கு செல்வதாக விவசாயிகள் போராட்டம்

ADDED : மார் 11, 2024 06:46 AM

பெங்களூரு : பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து காவிரியில் 4,579 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த தண்ணீர் தமிழகத்திற்கு செல்வதாக கூறி, ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, கண்ணம்பாடி கிராமத்தில், கே.ஆர்.எஸ்., அணை உள்ளது.
இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், கர்நாடகா - தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது. பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், கே.ஆர்.எஸ்., முக்கிய பங்கு வகிக்கிறது.
கர்நாடகாவில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது, அணை நிரம்பி விடும். கடந்த ஆண்டு கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் கே.ஆர்.எஸ்., அணை நிரம்பவில்லை.
ஆனாலும், காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுப்படி, கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது. தற்போது, அணையின் நீர்மட்டம் குறைந்து உள்ளது.
விவசாயிகள் கைது
இந்நிலையில், பெங்களூரிலும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
டேங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று 4,579 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதாக கூறி, கர்நாடக அரசை கண்டித்து, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். மாண்டியாவில் பா.ஜ.,வினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
'டேங்கர் மாபியா'
'காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை; பெங்களூரின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு உள்ளது' என்று, காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள்விளக்கம் அளித்துள்ளனர்.
பா.ஜ.,வின், 'எக்ஸ்' பதிவில், 'இண்டியா கூட்டணியில் தி.மு.க., இருப்பதால், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழகத்திற்கு காவிரி நீர் இலவசம். கன்னடர்களுக்கு சங்கடம் இலவசம்' என கூறப்பட்டு உள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''பெங்களூரு மக்கள், சொட்டு தண்ணீருக்கு பரிதவிக்கின்றனர். ஆனால் கர்நாடக காங்கிரஸ் அரசு, சத்தமின்றி காவிரி நீரை, தமிழகத்துக்கு திறந்து விட்டுள்ளது.
''பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை இருந்தால், டேங்கர் மாபியா மூலமாக, மேலும் கொள்ளையடிக்கலாம் என, முயற்சிக்கின்றனரா. இண்டியா கூட்டணியில் உள்ள தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடுக்காக, காவிரி நீர் திறந்து விடப்பட்டதா என்பதற்கு, துணை முதல்வர் சிவகுமார் பதிலளிக்க வேண்டும்,'' என்றார்.
புத்தி கெட்டுவிட்டது
துணை முதல்வர் சிவகுமார் கூறும்போது, ''கர்நாடகா பா.ஜ.,வினருக்கு புத்தி கெட்டுவிட்டது. நமக்கே குடிக்க தண்ணீர் இல்லை. தமிழகத்திற்கு எங்கிருந்து திறந்து விடுவது. பெங்களூரின் குடிநீர் தேவைக்காக, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., ஆகும். நேற்றைய நிலவரப்படி 15.09 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு 132 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 4,579 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.