செப்.,9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்: அறிவித்தது தேர்தல் ஆணையம்!
செப்.,9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்: அறிவித்தது தேர்தல் ஆணையம்!
UPDATED : ஆக 02, 2025 08:42 AM
ADDED : ஆக 01, 2025 01:09 PM

புதுடில்லி: நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்.,9ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கிய போது, ராஜ்ய சபாவை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நடத்தினார். அன்றைய தினம் இரவே திடீரென துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் அறிவித்தார். மேலும், தன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அதில், மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ல் துணை ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றிருந்தார். இந்த நிலையில், 17வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்.,9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விபரம்
தேர்தல் அறிவிப்பு நாள் ; ஆக., 07
வேட்புமனு கடைசி நாள்; ஆக.,21
வேட்புமனு பரிசீலனை; ஆக.,22
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்; ஆக., 25
தேர்தல்; செப் .,09
காலை 10 மணி முதல் 5 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.