ஆட்... காங்., எம்.எல்.ஏ.,க்கு தண்டனை ...புல் அவுட்...
ஆட்... காங்., எம்.எல்.ஏ.,க்கு தண்டனை ...புல் அவுட்...
ADDED : அக் 27, 2024 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்ல முன்னேற்றம்
வழக்கின் தீர்ப்பு நீதித்துறை மீது, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என்பதை, தீர்ப்பு நிரூபிக்கிறது. இரும்புத்தாது வழக்கில், தண்டனை கிடைத்திருப்பது நல்ல முன்னேற்றம். செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் மீதான விசாரணையின் போது, பல இடையூறுகள் ஏற்பட்டன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. தன் சக்தியை, நீதி காட்டியுள்ளது. இந்த முறைகேட்டில், மேலும் பலருக்கு தொடர்புள்ளது. அவர்களுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.
சந்தோஷ் ஹெக்டே,
முன்னாள் நீதிபதி, லோக் ஆயுக்தா.

