சத்தீஸ்கரில் ரூ.2.27 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட 49 பேர் உள்ளிட்ட 66 நக்சல்கள் போலீசில் சரண்
சத்தீஸ்கரில் ரூ.2.27 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட 49 பேர் உள்ளிட்ட 66 நக்சல்கள் போலீசில் சரண்
ADDED : ஜூலை 24, 2025 10:20 PM

பாஸ்தார்:சத்தீஸ்கரின் 5 மாவட்டங்களில் ரூ.2.27 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட 49 நக்சல்கள் உள்ளிட்ட 66 பேர் போலீசில் சரணடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தார் மாவட்டத்தில் ரூ.2.27 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டு 49 நக்சல்கள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று தேடப்பட்டு வந்த 49 பேர் உள்ளிட்ட 66 நக்சல்கள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
மாவோயிஸ்ட் சித்தாந்தத்தின் மீதான ஏமாற்றம், அப்பாவி பழங்குடியினர் மீது நக்சலைட்டுகள் செய்த அட்டூழியங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பிற்குள் வளர்ந்து வரும் உள் வேறுபாடுகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி, மூத்த காவல்துறையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை , எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் பணியாளர்கள் முன் 66 நக்சல்கள் சரண் அடைந்தனர்.
பிஜாப்பூர் 25 பேரும், தண்டேவாடாவில் 15 பேரும் கான்கரில் 13 பேரும், நாராயண்பூரில் 8 பேரும் சுக்மாவில் 5 பேரும் ஆயுதங்களை ஓப்படைத்து சரண் அடைந்தனர். இவர்களில் 27 பேர் பெண்கள் ஆவர்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

