ADDED : பிப் 26, 2024 02:23 AM

வரும்
லோக்சபா தேர்தலில் பா.ஜ., 370 இடங்களுக்கு மேல் பெற, தொண்டர்கள் அனைவரும்
ஒவ்வொரு பூத்திலும் கடந்த லோக்சபா தேர்தலை விட, 370 ஓட்டுகள் கூடுதலாக பெற
பாடுபட வேண்டும். கட்சியின் ஓட்டு வங்கி 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
மோடியை விரும்பும் மக்கள்!
நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள், மோடியே மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என விரும்புகின்றனர். மஹாராஷ்டிராவை ஆளும் எங்கள் கூட்டணி, லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணி 400 இடங்கள் பெற உழைக்கும்.
அஜித் பவார்
மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,
சகித்துக்கொள்ள மாட்டேன்!
இளைஞர்களின் வாழ்க்கையோடு, எதிர்காலத்தோடு யாராவது விளையாடினால், இந்த அரசு சகித்துக் கொண்டிருக்காது. அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, இந்த கொள்கையை உறுதியாக பின்பற்றி வருகிறது.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,

