ஐ.பி.எல்.,தொடர்: டில்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி
ஐ.பி.எல்.,தொடர்: டில்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி
UPDATED : மார் 23, 2024 07:30 PM
ADDED : மார் 23, 2024 05:31 PM

லூதியானா: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் டில்லி அணியை பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தி் டில்லி அணியை வீழ்த்தியது.
ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நேற்று துவங்கியது. பஞ்சாப் மாநிலம் முலான்பூர் மைதானத்தில் நடந்த இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் டில்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி '' பீல்டிங்'' தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் ஹோப் 33, அபிஷேக் 32, டேவிட் வார்னர் 29, மிச்சல் மார்ஷ் 20, அக்சர் படேல் 21 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்சாய் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து 175 ரன்களை வெற்றி இலக்காக களம் இறங்கிய பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டில்லிஅணியை வீழ்த்தியது.

