ADDED : நவ 02, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பர்த்வான்: மேற்கு வங்கத்தின் கிழக்கு பர்த்வான் பகுதியில், முஸ்லிம் மாணவர்கள் தங்கி படிக்கும் மதரஸா பள்ளி உள்ளது. இங்கு, 250 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். கடந்த, 31ம் தேதி இரவு மாணவர்களுக்கு சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ் பொறியல் வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட மாணவர்கள் எட்டு பேருக்கு மறுநாள் காலை வயிற்று போக்கு ஏற்பட்டதால், குஸ்காரா ஆரம்ப சுகாதார மையத்தில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இ தையடுத்து, மேலும் பல மாணவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் பர்த்வான் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .
இவ்வாறு, 100 மாணவர்கள் சிகிச்சை பெற்றனர். மாணவர்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போயிருந்ததா என்பதை கண்டறிய பரிசோதனை மையத்துக்கு உணவு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

