ADDED : ஆக 28, 2024 06:26 PM

புனே: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத்திற்கு ‛‛இசட் பிளஸ்'' சிறப்பு பாதுகாப்பு வழங்கிட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், பிரதான எதிர்க்கட்சியான சரத்சந்திரபவார் தேசிவாத காங். கட்சியின் சரத் பவாருக்கு சமீபத்தில் ‛‛இசட் பிளஸ்'' பிரிவு பாதுகாப்பு வழங்கி, சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் மோகன் பகவத்திற்கு பல்வேறு பயங்கரவாத அமைப்பால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மோகன் பகவத்திற்கு ‛இசட்பிளஸ்' உடன் ஏ.எஸ்.எல். எனப்படும் மேம்படுத்தப் பட்ட பாதுகாப்பு இணைப்புடன் கூடிய சிறப்பு பாதுகாப்பு பிரிவின் கீழ் பாகாப்பு வழங்கிட மத்திய உள்துறை அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது.
இது போன்று ஏ.எஸ்.எல்.,பிரிவு சிறப்பு பாதுகாப்பு பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதே ஏ.எல்.எஸ்., பிரிவின் கீழ் மோகன் பகவத்திற்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர். இப்பிரிவின் கீழ் தேவைப்பட்டால் கூடுதலாக ஹெலிகாப்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

