sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மவுனம் சாதிப்பது ஏன்?: கேட்கிறார் பிரியங்கா

/

மவுனம் சாதிப்பது ஏன்?: கேட்கிறார் பிரியங்கா

மவுனம் சாதிப்பது ஏன்?: கேட்கிறார் பிரியங்கா

மவுனம் சாதிப்பது ஏன்?: கேட்கிறார் பிரியங்கா

15


ADDED : ஏப் 29, 2024 04:01 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 04:01 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, 91. இவரது மூத்த மகன் ரேவண்ணா, 66. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.விசாரணைக்கு பயந்து, அவர் ஜெர்மனி தப்பியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார்.

தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா செய்த குற்றங்களை கேட்கும் போதே நெஞ்சம் நடுங்குகிறது. இது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?. எந்த கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?. இவ்வாறு அந்த பதிவில் பிரியங்கா கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us