காங்கிரசின் உத்தரவாதம் என்னென்ன?: ராகுல் சொல்வது என்ன?
காங்கிரசின் உத்தரவாதம் என்னென்ன?: ராகுல் சொல்வது என்ன?
ADDED : ஏப் 25, 2024 11:26 AM

புதுடில்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்களுக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் உத்தரவாதம் அதானிக்கானது தான். நாட்டின் செல்வம் கோடீஸ்வரர்களின் பைகளில் உள்ளது.
நடைபெறும் லோக்சபா தேர்தல் அவரது கையை விட்டு நழுவியதை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். மோடியின் ஆட்சியில் விவசாயிகள் ஒவ்வொரு காசுக்கும் ஏங்குகிறார்கள். அரசியலமைப்பும் ஜனநாயகமும் முடிந்துவிட்டது.
உத்தரவாதம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்களுக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும். 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

