அணுகுண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்: ராகுலுக்கு அமித்ஷா பதிலடி
அணுகுண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்: ராகுலுக்கு அமித்ஷா பதிலடி
ADDED : மே 25, 2024 04:54 PM

சிம்லா: 'நாங்கள் மோடியின் தொழிலாளர்கள் அணுகுண்டுகளை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்ரா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது: தே.ஜ., கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். ராகுல் 40 தொகுதிகளை தாண்ட மாட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை விரைவில் மீட்போம்.
அண்டை நாட்டில் அணுகுண்டுகள் இருப்பதாகக் கூறி, எங்களை காங்கிரஸ் பயமுறுத்த முயற்சி செய்கிறது. நாங்கள் மோடியின் தொழிலாளர்கள் அணுகுண்டுகளை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன்.
இலவச சிகிச்சை
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர்?. வளர்ச்சியை உருவாக்குவது பா.ஜ.,வின் நோக்கம். பா.ஜ., ஆட்சியில் 10 கோடி பேருக்கு காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

