எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் இது தான் நடக்கும்: நிதிஷ்குமார் கணிப்பு
எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் இது தான் நடக்கும்: நிதிஷ்குமார் கணிப்பு
UPDATED : ஏப் 04, 2024 03:01 PM
ADDED : ஏப் 04, 2024 02:53 PM

பாட்னா: 'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்து, முஸ்லிம் கலவரங்கள் நின்றுவிட்டது. நீங்கள் தவறுதலாக எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் மீண்டும் அந்தக் கலவரங்கள் துவங்கும்' என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
பீஹார் மாநிலம் ஜமுய் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது: மத்தியில் பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அவர் பீஹாருக்காகவும், நாட்டிற்காகவும் எவ்வளவோ பணிகளைச் செய்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்து, முஸ்லிம் கலவரங்கள் நின்றுவிட்டன.
நீங்கள் தவறுதலாக எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் மீண்டும் அந்தக் கலவரங்கள் துவங்கும். கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி வழங்கினார். இதை மக்கள் மறக்க மாட்டார்கள். நாங்கள் தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து வேலை செய்த வேகம் அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.

