ADDED : செப் 14, 2024 08:24 AM
அ நிறம் | அளவு
முதல்வர் சித்தராமையாவின் தவறான நிர்வாகத்தால், 'மூடா' உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்துள்ளன. முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இதுவே எங்கள் நிலைப்பாடு. சாமுண்டி மலை ஆணைய விவகாரத்திலும் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கோவில்களை அரசு கட்டுப்படுத்தத் தேவையில்லை. பழங்காலத்திலிருந்து இருக்கும் மத சடங்குகள் இன்று வரை அப்படியே தொடர வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இது பற்றி மேலும் பேச மாட்டேன். நெலமங்களாவில் நடந்த கலவரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தவறு செய்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யதுவீர், பா.ஜ., -- எம்.பி., மைசூரு
