ADDED : ஆக 17, 2024 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், எம்.எல்.ஏ., கார் மீது கல்வீசி தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாகிகோரா தொகுதி பாரத் ஆதிவாசி கட்சி எம்.எல்.ஏ., ஜெய்கிருஷ்ணா படேல். கடந்த 15ம் தேதி இரவு, ஆனந்தபுரி அருகே பர்ஜாடியா கிராமத்தில் படேல் சென்ற போது அவரது கார் மீது சிலர் கல்வீசி தாக்கினர்.
காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. தகவல் அறிந்து ஆனந்தபுரி ஸ்டேஷனில் இருந்து உதவி சப்--இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர படிதார் தலைமையில் போலீசார் வந்தனர்.
படேல் அளித்த புகார்படி வழக்குப் பதிவு செய்து விஷமிகளை தேடி வருகின்றனர்.
பன்ஸ்வாரா மாவட்ட கூடுதல் எஸ்.பி., ராஜேஷ் பரத்வாஜ், “குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,”என்றார்.

