sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பகீர்!அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க தரகர்கள் நியமனம்: கண்டுபிடித்த லோக் ஆயுக்தா சுழற்றுகிறது சாட்டை

/

பகீர்!அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க தரகர்கள் நியமனம்: கண்டுபிடித்த லோக் ஆயுக்தா சுழற்றுகிறது சாட்டை

பகீர்!அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க தரகர்கள் நியமனம்: கண்டுபிடித்த லோக் ஆயுக்தா சுழற்றுகிறது சாட்டை

பகீர்!அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க தரகர்கள் நியமனம்: கண்டுபிடித்த லோக் ஆயுக்தா சுழற்றுகிறது சாட்டை


ADDED : ஆக 10, 2024 11:18 PM

Google News

ADDED : ஆக 10, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: அரசு அலுவலகங்களில், தங்கள் சார்பில் லஞ்சம் பெற இடைத்தரகர்களை அதிகாரிகள் நியமிக்கும் புதிய டிரென்ட் துவங்கியுள்ளதை, கர்நாடக லோக் ஆயுக்தா கண்டுபிடித்தது. இதைத் தடுக்க சாட்டையை சுழற்றியதால், ஊழல் அதிகாரிகள் கிலி அடைந்துள்ளனர்.

கர்நாடக லோக் ஆயுக்தா, ஊழல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. வருவாய்க்கும் அதிகமாக சொத்து குவித்தவர்கள், லஞ்சம் வாங்குவோர், லோக் ஆயுக்தா பெயரை கேட்டாலே நடுநடுங்குகின்றனர்.

பல் இல்லாத பாம்பு


கடந்த 2016ல், காங்கிரஸ் அரசில் சித்தராமையா முதன் முறையாக, முதல்வராக இருந்தபோது, ஊழல் ஒழிப்புப் படை அமைத்தார். லோக் ஆயுக்தாவுக்கு இருந்த அதிகாரத்தை பறித்து, பல் இல்லாத பாம்பாக்கினார்.

ஊழல்வாதிகளை காப்பாற்றும் நோக்கில், லோக் ஆயுக்தாவை பலவீனமாக்கியதாக எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் அரசு பொருட்படுத்தவில்லை.

மாநிலத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜ., அரசு நடந்தபோது, கர்நாடக உயர் நீதிமன்றம், ஊழல் ஒழிப்புப் படையை ரத்து செய்து, லோக் ஆயுக்தாவுக்கு பழைய அதிகாரத்தை அளித்தது.

அதன்பின் லோக் ஆயுக்தாவின் வேட்டை தொடர ஆரம்பித்தது. அவ்வப்போது ஊழல் அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான ரொக்கம், கிலோக்கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்கள், சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.

இதற்கிடையே, தங்கள் சார்பில் பொதுமக்களிடம் லஞ்சம் பெற, அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்களை அதிகாரிகள் நியமித்திருப்பதை, லோக் ஆயுக்தா கண்டுபிடித்துள்ளது. இதைத் தடுக்க சாட்டையை சுழற்றியுள்ளது.

கையும், களவுமாக


பெங்களூரின், கே.ஜி., ரோட்டில் வருவாய் பவனில் தெற்கு தாலுகா சிறப்பு தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு தனியார் நபர் ஹேமந்த்குமார் என்பவர் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் இதே அலுவலகத்தில், ஜூலை 31ல், நானாராஜ் சுங்கதகட்டே என்பவரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி, அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

தள்ளுபடி


தனக்கு சொந்தமான 2.22 ஏக்கர் நிலத்தை ஆய்வு செய்யும்படி, பெங்களூரு தெற்கு சிறப்பு தாசில்தார் அலுவலகத்தில், நானாராஜ் சுங்கதகட்டே வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக சிறப்பு தாசில்தார் நாகராஜ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஹேமந்த் குமார் மூலமாக லஞ்சம் கேட்டிருந்தார்.

இதையடுத்து, லோக் ஆயுக்தாவில் நானாராஜ் சுங்கதகட்டே புகார் அளித்திருந்தார். போலீசார் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி, ஜூலை 31ல் பணத்துடன் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார்.

அதை ஹேமந்த்குமார் வாங்கியபோது, கையும் களவுமாக பிடிபட்டார். சிறப்பு தாசில்தார் நாகராஜ், ஹேமந்த் குமார் உட்பட, நால்வரை லோக் ஆயுக்தாவினர் கைது செய்தனர்.

ஜாமின் கோரி இவர்கள், லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்காக, சட்டவிரோதமாக இடைத்தரகர்களை நியமித்திருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. மற்றவர்கள் சார்பில் ஹேமந்த்குமார், புகார்தாரரிடம் லஞ்சம் பெற்றுஉள்ளார்.

ஊரறிந்த ரகசியம்


இங்கு மட்டுமின்றி, பெரும்பாலான அரசு அலுவலகங்களில், லஞ்சம் வசூலிக்க இத்தகைய ஊழியர்களை நியமித்திருப்பது, ஊரறிந்த ரகசியம். அரசு அலுவலகங்களில் எந்த அளவுக்கு ஊழல் நடக்கிறது என்பதற்கு, இந்த வழக்கே உதாரணமாக அமைந்துள்ளது.

இது போன்ற ஊழலுக்கு கடிவாளம் போட, வலுவான சட்டங்கள் இல்லாதது துரதிர்ஷ்டமாகும். சமீப நாட்களாக அரசு அலுவலகங்களில், ஊழல் என்பது பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. மக்களின் நம்பிக்கையை இழக்கிறது.

இவ்வாறு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.






      Dinamalar
      Follow us