பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திரா முதல்வர் ஜெகன் மீது கல்வீச்சு
பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திரா முதல்வர் ஜெகன் மீது கல்வீச்சு
UPDATED : ஏப் 13, 2024 10:17 PM
ADDED : ஏப் 13, 2024 10:07 PM

அமராவதி:தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தினர் இதில் அவர் காயம் அடைந்தார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் மாநில முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தனது அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தார். பிரசார வேனில் நின்று கொண்டு தனது ஆதரவாளர்களை பார்த்து கை அசைத்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதலை நடத்தினர். உடனடியாக அவர் கேரவனுக்குள் அழைத்து செல்லப்பட்டார். தொடரந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதில் முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டிக்கு இடது கண் புருவத்திற்கு மேல் காயம் ஏற்பட்டது. மேலும் அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவான வெல்லம்பள்ளிக்கும் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதனிடையே முதல்வர் மீதான தாக்குதலுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் பங்கு இருப்பதாக ஒய். எஸ்.ஆர்.சி.பி., கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

