3ம் கட்ட தேர்தல்; 1,352 வேட்பாளர்களில் 392 பேர் 'கோடீஸ்வரர்கள்'
3ம் கட்ட தேர்தல்; 1,352 வேட்பாளர்களில் 392 பேர் 'கோடீஸ்வரர்கள்'
ADDED : ஏப் 30, 2024 10:16 AM

புதுடில்லி: மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 1352 வேட்பாளர்களில் 392 பேர் கோடீஸ்வரர்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 1352 வேட்பாளர்களில் 392 பேர் கோடீஸ்வரர்கள். கோடீஸ்வரர் வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு 5.66 கோடி ரூபாயாக உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 123 பேர் மட்டுமே பெண்கள்.
குற்ற வழக்குகள்
வேட்பாளர்களில், 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஐந்து பேர் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர். 38 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடையவர்கள். 17 பேர் மீது வெறுப்புப் பேச்சு தொடர்பாக அவதூறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

