தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்; தப்பியது சரக்கு ரயில்: உ.பி.,யில் சதித்திட்டம் முறியடிப்பு

தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்; தப்பியது சரக்கு ரயில்: உ.பி.,யில் சதித்திட்டம் முறியடிப்பு

தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்; தப்பியது சரக்கு ரயில்: உ.பி.,யில் சதித்திட்டம் முறியடிப்பு


ADDED : செப் 22, 2024 12:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2024 12:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் காலியான காஸ் சிலிண்டரை கண்டு, சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் இன்று (செப்.,22) ப்ரேம்பூர் ஸ்டேஷனில் தண்டவாளத்தில், காலியான காஸ் சிலிண்டர் கிடந்துள்ளது. கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் வரை செல்லும் சரக்கு ரயில் அப்பகுதியில் வாயிலாக வந்தது. டிரைவர் உஷாராக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிகாரிகள் சிலிண்டரை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். சிலிண்டர் காலியாக இருந்துள்ளது. ரயிலை கவிழ்க்க சதி திட்டம் நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us