டெக்னிக்கல் அனாலிசிஸ்: திடீரென சிறியதொரு ஏற்றம் வந்து போகலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: திடீரென சிறியதொரு ஏற்றம் வந்து போகலாம்
UPDATED : செப் 09, 2026 02:58 AM
ADDED : செப் 09, 2026 02:05 AM

நேற்று 36 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 144 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள், 17ல் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 0.52 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.40 சதவீத இறக்கத்துடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.31 சதவீத உயர்வுடனும், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.98 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,648 நிறுவனங்களின் பங்குகளில் 1,710 ஏற்றத்துடனும்; 1,833 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி எல்லா முக்கிய சராசரிகளுக்கும் (இ.எம்.ஏ.,) கீழே மீண்டும் நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., - ஆர்.ஓ.சி., போன்றவை இறக்கத்திற்கு ஆதரவான நிலையிலேயே இருக்கின்றன.
மேலும், ஒரு சில நாட்களாக குறைந்த உச்சம் மற்றும் குறைந்த நீச்சம் என்ற நிலைமை தொடர்ந்து வந்துள்ளது. எனவே, குறுகிய கால டெக்னிக்கல் சூழல் இறக்கத்திற்கு சாதகமாகவே உள்ளது.
![]() |
பாஸ்ட் ஸ்டோக்காஸ்ட்டிக் %கே மற்றும் பாஸ்ட் ஸ்டோக்காஸ்ட்டிக் %டி போன்றவை ஓவர்சோல்டு என்ற நிலைமையை அடைந்துள்ளன. இத்துடன் ஆர்.எஸ்.ஐ., 30.88 என்ற அளவில் இருப்பது சிறியதொரு, திடீர் ஏற்றம் வந்து செல்ல வாய்ப்பை காட்டுகிறது.
நிப்டி 23,600-க்கு கீழே சென்றால், 23,500 - 23,300 வரையிலும் செல்ல வாய்ப்புள்ளது. 23,800க்கு மேலே செல்லும் பட்சத்தில் மட்டுமே, தற்போதைய டெக்னிக்கல் சூழலில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. டெக்னிக்கலாக இறக்கம் தொடரவே வாய்ப்பிருந்தாலும் திடீர் ஏற்றம் வந்துபோவதற்கான சூழல் தென்படுவதை மறுக்க முடியாது.

