sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 செடிமேக் மெகாட்ரானிக்ஸ்

/

 செடிமேக் மெகாட்ரானிக்ஸ்

 செடிமேக் மெகாட்ரானிக்ஸ்

 செடிமேக் மெகாட்ரானிக்ஸ்


UPDATED : மார் 04, 2026 01:37 AM

ADDED : மார் 04, 2026 01:35 AM

Google News

UPDATED : மார் 04, 2026 01:37 AM ADDED : மார் 04, 2026 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள முக்கிய போக்குவரத்து மற்றும் தொழில்துறை சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு தேவையான அதிநவீன மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கி வருகிறது. இவர்கள் வழங்கும் தீர்வுகள் அனைத்தும் நிறுவனத்தின் சொந்த முயற்சியால் உருவான தனித்துவமான தொழில்நுட்பங்களை கொண்டு, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பதால், வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மைகளை தருகின்றன.

சிறப்பம்சங்கள்:

• முதன் முதலாக சென்சார் - லெஸ் மோட்டார் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தில் காப்புரிமை பெற்று செயல்படும் முன்னோடி நிறுவனமாக திகழ்வது

• வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு என்ற அனைத்தும் முழுக்கமுழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்படுவது

• உலகளாவிய முன்னணி ஓ.இ.எம்., நிறுவனங்களுடன் வலுவான மற்றும் நிலையான தொழில் ரீதியான கூட்டணியை கொண்டுள்ளது

• ஜென்செட் கன்ட்ரோலர்கள் சந்தையில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னணியில் உள்ளது

• வருவாய் மற்றும் லாபத்தில் அதிக வளர்ச்சியுடன் கூடிய வலுவான நிதி நிலையை கொண்டுள்ளது.

ரிஸ்க்குகள்:

வருவாயின் பெரும்பகுதி வாகன மற்றும் ஜெனரேட்டர் துறைகளையே அதிகம் சார்ந்துள்ளது. மேலும், உலகளாவிய முதல்நிலை உற்பத்தியாளர்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது

உலகளாவிய செமிகண்டக்டர் வினியோக தொடரில் ஏற்படும் இடையூறுகளால் இந்நிறுவனம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது

ஓ.இ.எம்.,கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கையான செலவு குறைப்பு எனும் அம்சத்தினால் லாப சதவீதத்தை குறைத்துக்கொள்வதற்கான அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு

வாகன உற்பத்தித் துறையில் (2/3 சக்கர) ஏற்படும் வேகமான தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் (குறிப்பாக மின்சார வாகனமயமாகுதல்) மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள உமிழ்வு விதிமுறைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சவாலாக அமையலாம்

வாடிக்கையாளர் செறிவுதனை கொண்டிருப்பது

பொருளாதார மந்தநிலை உருவானால் அது நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.

கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us